உலகம்

500 மில்லியன் தடுப்பூசிகளை தானமாக அளிக்க முன்வந்த அமெரிக்கா

செய்திப்பிரிவு

அமெரிக்கா 500 மில்லியன் கரோனா தடுப்பூசிகளை வாங்கி அவற்றை உலக நாடுகளுக்குத் தானமாக வழங்க முன்வந்துள்ளது.

குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதன் மூலம் மொத்தம் 1 பில்லியன் தடுப்பூசிகளை தானமாக வழங்கிய நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா பெறக்கூடும்.

இது குறித்து அதிபர் பைடன் நிர்வாக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாளை அதிபர் பைடன் முறைப்படி மேலும் 500 மில்லியன் ஃபைஸர் தடுப்பூசியை அமெரிக்கா கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை வெளியிடுவார். இதனால் 1.1 பில்லியன் தடுப்பூசியை தானமாக வழங்கிய முதல் நாடு என்று அந்தஸ்தை அமெரிக்கா பெறும். இந்தத் தடுப்பூசிகள் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

இந்த அரை பில்லியன் தடுப்பூசிகளும் அடுத்த ஜனவரி தொடங்கி அனுப்பிவைக்கப்படும். அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் உலகம் முழுவதும் உள்ள குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு நாடுகளுக்கு 800 மில்லியன் தடுப்பூசி சென்றடையும் என்று கூறினார்.

இதுவரை அமெரிக்கா, பெரு, பாகிஸ்தான், இலங்கை, சூடான், எல் சால்வடார், எதியோபியா உள்ளிட்ட நாடுகளுக்கு 160 மில்லியன் டோஸ் தடுப்பூசியை அனுப்பிவைத்துள்ளது.

SCROLL FOR NEXT