உலகம்

காலநிலை மாற்றம்: வளர்ந்த நாடுகளுக்கு போரிஸ் ஜான்சன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

வளர்ந்த நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.

நியூயார்க்கில் நடைபெற்ற 76-வது ஐ.நா. சபை கூட்டத்தில் போரிஸ் ஜான்சன் பேசும்போது, “காலநிலை மாற்றத்துக்கு எதிராக வளர்ந்த நாடுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வங்கதேசம், மாலத்தீவு போன்ற நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகளிடம் நிதியை எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம்.

காலநிலை நெருக்கடிக்கு எதிராகக் குறைந்தபட்சமாகப் பங்காற்றிய நாடுகள்தான் இப்போது மிக உயர்ந்த விலையை எதிர்கொள்கின்றன.

வளரும் நாடுகள்தான் சூறாவளி, காட்டுத் தீ, வெள்ளத்தின் வடிவத்தில் பேரழிவு தரும் காலநிலை மாற்றத்தின் சுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் நீண்டகாலப் பொருளாதாரச் சுமைகளை அவை எதிர்கொள்கின்றன” என்று தெரிவித்தார்.

”காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் உலகத் தலைவர்கள் கவனம்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். உலகளாவிய மீத்தேன் உமிழ்வை 2030க்குள் குறைந்தது 30% ஆகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள ஒப்பந்தத்தில் பிற நாடுகள் சேருவதை வலியுறுத்துகிறோம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

SCROLL FOR NEXT