பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையை ஒட்டிய வடமேற்கு பழங்குடியினர் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நடத்திய இருவேறு தாக்குதல்களில் 9 போலீஸார் கொல்லப்பட்டனர்.
முகமண்ட் மாவட்டத்தில் பாண்டியாலி என்ற இடத்தில் போலீஸ் சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. இச்சாவடி மீது நள்ளிரவு 1 மணியளவில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி அங்கிருந்த 7 போலீஸாரை சுட்டுக்கொன்றனர். சோதனைச் சாவடிக்கும் தீ வைத்தனர். இதே மாவட்டத்தில் மற்றொரு சம்பவ மாக, மிச்னி பகுதியில் காவல் பணியில் இருந்த 2 போலீஸாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.