உலகம்

மியான்மர் ராணுவ விமான விபத்தில் 4 வீரர்கள் பலி; இந்தோனேசிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

பிடிஐ

மியான்மரில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் நேற்று விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். இதுபோல், இந்தோனேசிய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

மியான்மர் விமானப்படைக்கு சொந்தமான பீச்கிராப்ட் சிறிய ரக பயணிகள் விமானம் தலைநகர் நேப்பிடா விமான நிலையத்திலி ருந்து வழக்கமான ரோந்து பணிக் காக நேற்று காலையில் புறப்பட் டது. 5 பேருடன் புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகே நிலப்பகுதி யில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இதை அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு அரசின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் என்ற இடத்தில் உள்ள அப்துல் ரச்மான் சலே விமானப்படைத் தளத்திலிருந்து ராணுவத்துக்கு சொந்தமான சூப்பர் டுகானோ டர்போபிராப் விமானம் சோதனை ஓட்டமாக நேற்று காலையில் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங் களில் அந்த விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

இதில் விமானி, வீட்டில் இருந்த இருவர் என மூன்று பேர் பலியா யினர். விமானத்தில் பயணித்த பொறியாளரின் நிலை தெரிய வில்லை. சமீப காலமாக இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ் வதால், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

          
SCROLL FOR NEXT