உலகம்

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையராகிறார் ஜோர்டன் தூதர்

செய்திப்பிரிவு

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் புதிய ஆணையர் பதவிக்கு ஜோர்டன் நாட்டுக்கான தூதர் பிரின்ஸ் செய்து ராத் அல் ஹூசைனை தான் முன்மொழிவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

அல் ஹூசைஅன் (50), ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றார். பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றார். தற்போது அவர் ஜோர்டன் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக இருக்கிறார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் நவி பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அல் ஹூசைன் புதிய ஆணையர பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT