உலகம்

திரைப்பட தணிக்கைக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம்: கமல்ஹாசன் கருத்து

பிடிஐ

‘‘திரைப்பட தணிக்கை முறைக்கு எதிரான போராட்டத்தில் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், ‘இந்தியா வின் வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திரைப்பட தணிக்கை என்பதை நான் மறுக்கிறேன். அதற்கு பதில் சான்றிதழ் என்று கூறுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அந்த சான்றிதழ் சட்டப்பூர்வ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்போது தணிக்கைக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அதனால், இனிமேல் அது தணிக்கை வாரியமாக இருக்காது. சான்றளிக்கும் வாரியமாக இருக்கும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன் மேலும் கூறுகை யில், ‘‘அமெரிக்க நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து தற்போது புதிய படத்துக்கான திரைக்கதை ஆலோசனையில் ஈடுபட்டுள் ளேன். அந்த படம் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும். அந்தப் படத்தை நானே இயக்குவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இந்திய திரைத் துறையில் திருட்டு என்பது மிகப்பெரிய பிரச்சி னையாக உள்ளது. திரைத் துறை யில் கறுப்பு பணத்தை குவிக்க முயற்சிகள் நடக்கின்றன என்று கமல்ஹாசன் கூறினார்.

மத்திய திரைப்பட தணிக்கை குழுவை மறுசீரமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பரிந்து ரைக்க சிறப்பு குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் நடிகர் கமல்ஹாசன் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த விஸ்வ ரூபம் திரைப்படம் தமிழ்நாட்டில் 15 நாட்கள் தடை செய்யப்பட்டது. அப்போது, திரைப்பட தணிக்கை குழுவின் விதிமுறைகள் குறித்து கமல்ஹாசன் அதிருப்தி தெரிவித் திருந்தார்.

SCROLL FOR NEXT