அகதிகள் விவகாரத்தில் இனி மேலும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது, இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் மெக்ஸிகோவும் பல்வேறு விளக்கங்களை கூறுவதை ஏற்க முடியாது என்று போப் பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மெக்ஸோவில் 6 நாட்கள் பயணம் மேற்கொண்ட போப்பாண்டவர் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்து வாடிகன் திரும்பினார். கடைசி நாளான நேற்று மெக்ஸிகோ எல்லைப் பகுதியான சியூடேட் ஜுராஸ் பகுதியில் மக்களுக்கு அவர் ஆசி வழங்கினார்.
இப்பகுதி அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது. மெக்ஸிகோவில் இருந்து ஏராள மானோர் அகதிகளாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அவர்கள் எல்லை யைக் கடக்கும்போது அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
இது குறித்து சியூடேட் ஜுராஸ் பகுதியில் போப்பாண்டவர் பேசியதாவது: அப்பாவி தொழிலாளர்களை சிலர் ஏமாற்றி எல்லையை கடக்கச் செய்கின்றனர். இதில் நமது சகோதர, சகோதரிகள் நாள்தோறும் பலியாகி வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தலுக் காக சிலர் ஏழைத் தொழிலாளர் களை தங்கள் வலையில் சிக்கச் செய்து பலிகடாவாக்குகின்றனர். மெக்ஸிகோவில் இருந்து எல்லை கடந்து சென்ற பலர் அமெரிக்காவில் அகதிகளாக வாழ்கின்றனர். இந்தப் பிரச்சினை மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இனிமேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது, இந்த விவகாரத் தில் எவ்வித விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அகதிகள் விவகாரத்தில் அமெரிக்கா, மெக்ஸிகோ அரசு களை நேரடியாக குறிப்பிடாமல் இப்பிரச்சினைக்கு தீர்வு காணு மாறு போப்பாண்டவர் வலியுறுத் தியுள்ளார். மெக்ஸிகோவின் சியூடேட் ஜுராஸ் நகரில் போப்பாண் டவர் திறந்தவெளியில் பிரார்த் தனை கூட்டத்தை நடத்தினார். அப்போது போப்பாண்டவரை நேரில் காண அமெரிக்க பகுதியில் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டிருந்தனர்.