ஆப்கன் அரசுக்கு ஆதரவு தாரீர் என உலக நாடுகளுக்கு தலிபான் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் சயீது முகமது தய்யப் அகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்தபின், தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தலைநகர் காபூலைக் கைப்பற்றியவுடன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். கடந்த மாதம் 31-ம்தேதியோடு ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. இதனால், ஆப்கனுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். புதிய அரசை அவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கன் அரசுக்கு ஆதரவு தாரீர் என உலக நாடுகளுக்கு தலிபான் முன்னாள் அதிகாரி சயீது முகமது தய்யப் ஆகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கன் அரசுக்கு ஆதரவு தாரீர் என உலக நாடுகளுக்கு தலிபான் முன்னாள் அதிகாரி சயீது முகமது தய்யப் ஆகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலிபான்களின் அரசியல் பிரிவின் முன்னாள் நிறுவனத் தலைவரான சயீது முஅமது தய்யப் ஆகா கூறியதாவது:
தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் அனைத்து சிறுபான்மை இனங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் அமெரிக்க ஆதரவு முந்தைய அரசாங்கத்தின் அங்கமாக இருந்திருந்தாலும் கூட அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும்.
உலக நாடுகள் குறிப்பாக, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் ஆப்கனின் புதிய அரசுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை ஆப்கனை அங்கீகரிக்க வேண்டும். கூடவே அமெரிக்காவின் அங்கீகாரமும் வேண்டும். சர்வதேச சமூகம் ஆப்கனை தனிமைப்படுத்திவிடக் கூடாது.
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி முழுமையாக இரண்டு நாட்கள் ஆன நிலையில், அகா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அகா, முல்லா முகமது ஒமரின் தலைமையின் போது தலிபான்களின் அரசியல் ஆணையராக இருந்தவர்.