2013ஆம் ஆண்டு மட்டும் தந்தத்திற்காக ஆப்பிரிக்காவில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்ற திடுக்கிடும் தகவலை சர்வதேச வனவிலங்குகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 80% யானைகள் கென்யா, தான்சானியா, மற்றும் உகாண்டாவில் கொல்லப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டும் இதே அளவு யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
தந்த வியாபாரக் கள்ளச் சந்தை என்ற மாஃபியா பெருமளவு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்துள்ளது.
இது தவிர ஆசிய நாடுகளிலும் யானைகளை தந்தத்திற்காகக் கொல்வது அதிகரித்துள்ளதாகவும் ஆனால் இது பற்றிய ஒட்டுமொத்தமான தரவுகள் கிடைக்கவில்லை என்றும் வனவிலங்குகள் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
சீன சர்க்கஸ்களுக்கும், தாய்லாந்து சுற்றுலாத்துறைக்காகவும் யானைகள் அனுப்பப்படுவது அதிகரித்திருப்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது என்று கூறப்பட்டுள்ளது.