உலகம்

ஐஎஸ், அல்காய்தா, தலிபான்களை வளர்த்து ஆளாக்கியது பாகிஸ்தான்: அமெரிக்க நாளிதழ் பகிரங்க குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஐ.எஸ், அல்காய்தா, தலிபான் உள் ளிட்ட தீவிரவாத இயக்கங் களை பாகிஸ்தான் உளவுத் துறை நீரூற்றி உரமிட்டு வளர்த்து ஆளாக்கியுள்ளது என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக நாளிதழின் தலையங்கப் பக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது:

சர்வதேச தீவிரவாத தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவு கிறார்கள். அதற்கு பல உதார ணங்கள் உள்ளன. தலிபான் இயக் கத்தை தலைமையேற்று நடத்தும் ஹக்கானி கூட்டமைப்பின் தலைவர் சிராஜுதின் ஹக்கானி. இவர் தலி பான் இயக்கத்தின் 2-வது பெரிய தலைவர் ஆவார். இவர் பாகிஸ் தானில் அச்சமின்றி நடமாடுகிறார். அண்மையில் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் உளவு அமைப் பின் தலைமையகத்துக்கு சென் றுள்ளார்.

தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா அக்தர் முகமது மன்சூர் தற்போது பாகிஸ்தானின் குவெட்டா நகரில் வாழ்கிறார். கடந்த ஆண்டு தலிபான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரை அவர் தீவிரப்படுத்தியுள்ளார்.

அடு்த்ததாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவா ஹிரி. இவர் பாகிஸ்தானின் பலுசிஸ் தான் மாகாணத்தில் சகலவித பாது காப்பு வசதிகளுடன் வாழ்கிறார். அவரது தலைமையில் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அல்-காய்தா தீவிரவாத பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த முகாம்களை அழிக்க அமெரிக்க ராணுவம் கடுமையாகப் போராடி வருகிறது.

சர்வதேச நாடுகளால் தேடப்படும் இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு ஆதரவு அளிக்கிறது.

ஐ.எஸ். அமைப்புக்கு உதவி

இதேபோல சிரியா, இராக்கில் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருக் கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வளர்ச் சிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு பெரிதும் உதவியிருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டில் பாகிஸ் தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதி யில் இருந்து ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் சிரியாவுக்கு சென்ற னர். அவர்கள் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து கத்தா ருக்கு விமானத்தில் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு புதிய பாஸ் போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் துருக்கி சென்ற தீவிரவாதிகள் அங்கிருந்து சிரியா வுக்குள் எளிதாக ஊடுருவியுள் ளனர்.

ஐ.எஸ். அமைப்பில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இணைய அந்த நாட்டு உளவு அமைப்பு நேரடியா கவே உதவியுள்ளது. அந்த வகை யில் கத்தார் நாட்டுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே திரை மறைவு உறவு இருப்பது அம்பல மாகியுள்ளது.

இவை தவிர சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தான் மதரஸாக்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஜிகாத் போரில் ஈடுபட விரும்புவோருக்கு பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கப்பட்டு பாஸ்போர்ட்டும் வழங்கப்படுகிறது.

மறைந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க கடற்படை வீரர்களின் அதிரடி நடவடிக்கையால் கொலை செய்யப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

காஷ்மீர் தீவிரவாதி பேட்டி

அண்மையில் இந்திய காஷ்மீர் பகுதியில் செயல்படும் கொரில்லா கமாண்டர் ஒருவர் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித் தார். அவர் கூறியபோது, கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவம் எனக்கு ஊதியம் வழங்கி வருகிறது. மேலும் அந்த ராணுவ உத்தரவின்பேரில் போஸ்னியா, செசன்யா, காஷ்மீர், ஆப்கானிஸ் தானுக்கு சென்று தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சன்னி முஸ்லிம்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்காகவே ஐ.எஸ்., அல்-காய்தா, தலிபான்கள் உள்ளிட்ட சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு அந்த நாட்டின் உளவு அமைப்பு தாராளமாக உதவி வருகிறது.

ஆனால் பாகிஸ்தானின் தீவிர வாத நடவடிக்கைகளை சர்வதேச சமுதாயம் கண்டும் காணாமல் இருப் பது ஏன் என்பது புரியவில்லை.

இவ்வாறு கட்டுரையில் கூறப்பட் டுள்ளது.

இந்த கட்டுரையை எழுதியவர் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் மூத்த நிருபர் கார்லட்டோ கேல் ஆவார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிருபராகப் பணியாற்றியுள்ளார். தற்போது நியூயார்க் டைம்ஸின் சிறப்பு நிருபராக வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் செய்தி சேகரித்து வருகிறார்.

SCROLL FOR NEXT