உலகம்

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அனைவருக்கும் மாதம் ரூ.1.6 லட்சம்: வாக்கெடுப்பு நடத்துகிறது சுவிட்ஸர்லாந்து

செய்திப்பிரிவு

வேலை செய்தாலும் செய்யாவிட் டாலும் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா 2,500 ஸ்விஸ் பிராங்க் (சுமார் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம்) அளிக்க சுவிட்ஸர்லாந்து அரசு முன்வந்துள்ளது. இதுதொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இதுபோன்று, மாதாந்திர வருமான உத்தரவாதம் தொடர்பாக முதல் வாக்கெடுப்பு நடத்தும் முதல் நாடு என்ற பெரு மையை சுவிட்ஸர்லாந்து பெறும்.

வேலைவாய்ப்புக்கும் வரு மானத்துக்கும் இடையில் உள்ள தொடர்பை அறுக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் குறைந்தபட்ச மாதாந்திர வருமானம் உறுதி. அறிவுஜீவி குழு ஒன்று இதனை பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்ற சுவிட்ஸர்லாந்து மத்திய அரசு வாக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பில், குறைந்த பட்ச மாதாந்திர வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அளவு மக்கள் தொடர்ந்து வேலை செல்ல விரும்புகின்றனர், வேலை தேடி வருகின்றனர்.

வெறும் 2 சதவீதம் மக்கள்தான் இந்த தொகை கிடைத்தால், வேலைக்கு செல்வதை நிறுத்த விரும்புகிறன்றனர். 8 சதவீதம் பேர் சூழ்நிலையைப் பொறுத்து முடி வெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

“உத்தரவாத வருமானம் கொடுக்கப்பட்டால், கூடுதல் தொகைக்காக உழைப்பதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்து விடும் என இத்திட்டத்தை எதிர்ப் பவர்களின் கருத்து, இந்த கருத்து கணிப்பு மூலம் முரண்பட்டிருப்பது தெரியவந்துள்ளது” என இத் திட்டத்தை பரிந்துரை செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் சுமார் ரூ.40 ஆயிரம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.13.79 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT