தலிபான்களின் வழியை பின்பற்ற சீனா நினைப்பதாக தைவான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைவிதியை பார்க்கும்போதும் தைவானும் அமெரிக்காவை நம்பக் கூடாது என்பதை காட்டுவதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன.
இதுகுறித்து தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ கூறும்போது, “ சீனா கனவு காண்கிறது. தலிபான்கள் வழியை பின்பற்ற நினைக்கிறது. ஆனால் நாங்கள் எங்களை பாதுகாத்து கொள்வோம்” என்றார்.
தைவான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.
தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு கூறினார்.
சீனா சமீபத்திய ஆண்டுகளில் தைவானை சுற்றி தனது போர்ப் பயிற்சியையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தைவான் இடையிலான எல்லையை கடந்துள்ளன என்றும்அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறியது குறிப்பிடத்தக்கது.