காபூல் வீழ்ச்சிக்கு பாகிஸ்தானே காரணம் என அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இன்றொரு செய்தியில் வெளியாகி இருந்தது. அதில், காபூலின் வீழ்ச்சிக்கு அமெரிக்காவின் கணக்கு தவறானதே காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜான் சைஃபர் என்ற அதிகாரி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
இந்த 20 ஆண்டு காலத்தில் பாகிஸ்தான் எப்போதாவது அது தலிபான்களுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்தாலும் கூட இவ்வளவு சீக்கிரம் வீழ்ச்சியைக் கண்டது நமது ஆப்கன் கூட்டாளிகளாக இருந்திருக்க மாட்டார்கள். மாறாக தலிபான்களாகவே இருந்திருப்பார்கள்.
பாகிஸ்தானின் ஆதரவுடன் தலிபான்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் வழங்கியும் கூட ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகளாக அவர்களை எதிர்கொண்டது பாராட்டுதலுக்குரியது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் வீழ்ச்சியடைந்ததில் அமெரிக்காவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து பிடென் பேசியவை எல்லாமே உண்மைக்குப் புறப்பானது. அவர், ஆப்கானிஸ்தான் கள நிலவரத்தை தானும் தனது பாதுகாப்புப் படையும் கூர்மயாகக் கவனித்து வந்ததாகக் கூறினார்.
ஆனால், ஆப்கன் நிலவரம் குறித்து அமெரிக்கா தவறான தகவல்களையே தெரிவித்துவிட்டது என்று விமர்சித்துள்ளார்.