பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள் ளது.
கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை யில் இஸ்லாமாபாதில் உள்ள லால் மசூதியில் தீவிர வாதிகளுக் கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது.
இதில் லால் மசூதி மத குரு அப்துல் ரஷித் காஸி கொல்லப் பட்டார். அவரது குடும்பத்தினர் முஷாரபுக்கு எதிராக இஸ்லாமா பாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் முஷாரபை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை நீதி மன்றம் நேற்று பிறப்பித்தது. வரும் மார்ச் 16-ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.