உலகம்

காதலர் தினத்தை கொண்டாடாதீர்: பாகிஸ்தான் அதிபர்

செய்திப்பிரிவு

காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம் என தன் நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹூசைன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் விடுதலை போராட்ட வீரர் சர்தார் அப்துர் ராப் நிஸ்தார் நூற்றாண்டு விழாவில் கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அதிபர் மமூன் ஹூசைன் கூறியதாவது:

காதலர் தினத்தை நம் நாட்டு மக்கள் கொண்டாடக் கூடாது. அது மேற்கத்திய கலாச்சாரம். மேற்கத்திய கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக அப்படியே உள்வாங்குவதால் நமது கலாச்சாரம் சீரழியும்.

காதலர் தினத்தைக் கொண்டாடியதால் நம் அண்டை நாட்டு பெண்கள் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க காதலர் தினத்தைக் கொண்டாடாமல் இருக்கலாம்" என்றார்.

முன்னதாக, பெஷாவார், கோட்டக் ஆகிய மாகாண கவுன்சில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அதிபரும் காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இருப்பினும், காதலர் தின கொண்டாட்டத்துக்கு சட்ட ரீதியாக தடை ஏதும் இல்லை என்பதால் கொண்டாடங்களை தடுக்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT