உலகம்

வடகொரியா ஏவுகணை சோதனை: உலக நாடுகள் கடும் கண்டனம்

ஏஎஃப்பி

வடகொரியா அரசு ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மறுத்துள்ள வடகொரியா, செயற்கைகோளை ஏவியதாக விளக்கமளித்துள்ளது. இதனால் பரபரப்பு நிலவுகிறது.

வடகொரியாவில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு ஏவுகணை ஒன்று விண்ணில் சீறி பாய்ந்தது. அது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவை தாக்கும் வகை யில் வடிவமைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், ராக்கெட் மூலம் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியதாகவும், அது சுற்றுவட்ட பாதையில் வெற்றி கரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் வடகொரியா அரசு தெரிவித்துள் ளது. இதுகுறித்து தொலைக்காட்சி யில், ‘‘வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி ராக்கெட் மூலம் செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது. அந்த செயற்கை கோளுக்கு குவாங்மையாங்-4 என்று பெயரிடப்பட்டுள்ளது’’ என்று பெண் அறிவிப்பாளர் ஒருவர் செய்தி வெளியிட்டார்.

எனினும், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நீடிப்பதால், தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கடும் கண் டனம் தெரிவித்துள்ளன. வடகொரி யாவின் செயல் முற்றிலும் பொறுத்து கொள்ள முடியாதது என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.

விண்ணில் ஏவுகணை பாய்ந்த தகவல் அறிந்தவுடன், அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நியூயார்க்கில் நேற்று நடந்தது. அதேபோல் ஐ.நா. பாது காப்பு கவுன்சிலின் அவசர கூட்ட மும் நடந்தது.

இவ்விரு கூட்டங்களிலும் வட கொரியாவின் நடவடிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் கொரியா அதிபர் பார்க் மியூன் ஹையி வலியுறுத்தி உள்ளார்.

ஐ.நா. கண்டனம்

ஏவுகணை சோதனையை வட கொரியா அரசு உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். சர்வ தேச சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு செயல்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவும் கண்டனம்

வடகொரியாவின் செயல் கொரிய பிராந்தியத்தின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தலாக மாறி உள் ளது என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT