உலகம்

வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவத்தில் 7 பேர் கைது: முகம்மது யூனுஸ் தகவல்

மோகன் கணபதி

டாக்கா: வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘‘மைமன்சிங் மாவட்டம் பலுகாவில் 27 வயது சனாதன இந்து தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ராப்பிட் ஆக்ஷன் பட்டாலியன் (ஆர்ஏபி) படையினர், சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளனர். ஆர்ஏபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லிமோன் சர்க்கார் (19), தாரிக் ஹொசைன் (19), மாணிக் மியா (20), எர்ஷாத் அலி (39), நிஜும் உத்தின் (20), அலோம்கிர் ஹொசைன் (38), மிராஜ் ஹொசைன் அகோன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ஏபி பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டைகளை நடத்தி மேற்கூறிய சந்தேக நபர்களை கைது செய்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மறைந்த மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்​மான் ஹாடியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் இறுதிச் சடங்கு பிரார்த்தனை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தெற்கு பிளாசா பகுதியில் முகம்மது யூனுஸ் தலைமையில் இந்த பிரார்த்தனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹாடி படித்த டாக்கா பல்கலைக்கழகத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு மற்றுமொரு பிரார்த்தனை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், பல்கலைக்கழக வளாகத்திலேயே அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக டாக்காவில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாறிவரும் வங்கதேச அரசியல்: வங்​கதேச அரசுக்கு எதி​ராக மாணவர் அமைப்​பு​கள் கடந்த ஆண்டு நடத்​திய போராட்​டத்​தில் வன்​முறை வெடித்​தது. இதையடுத்​து, பிரதமர் பதவி​யில் இருந்து வில​கிய ஷேக் ஹசீ​னா, நாட்​டை​விட்டு வெளி​யேறி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். இதை தொடர்ந்​து, பொருளா​தார நிபுண​ரான முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைக்கப்பட்டு, செயல்​பட்டு வரு​கிறது.

வங்​கதேசத்​தில் 2026 பிப்​ர​வரி 12-ம் தேதி பொதுத் தேர்​தல் நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், டாக்​கா-8 தொகுதி வேட்​பாள​ராக ஷெரீப் உஸ்​மான் ஹாடி (32) என்ற மாணவர் தலைவர் களமிறங்​கி​னார். இன்​கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்​டக் குழு​வின் மூத்த தலை​வ​ரான இவர், கடந்த ஆண்டு மாணவர் போராட்​டத்தை வழிநடத்​திய முக்​கிய தலை​வர்​களில் ஒரு​வர்.

இந்​நிலை​யில், டாக்​கா​வில் கடந்த 12-ம் தேதி பிரச்​சா​ரத்தை தொடங்​கிய இவரை, முகமூடி அணிந்த மர்ம நபர்​கள், தலை​யில் சுட்​டனர். இதில் படு​கா​யம் அடைந்த அவருக்கு டாக்​கா​வில் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. இதில் முன்​னேற்​றம் இல்​லாத​தால் கடந்த 13-ம் தேதி ஆம்​புலன்ஸ் விமானம் மூலம் சிங்​கப்​பூர் கொண்டு செல்​லப்​பட்​டு, அங்கு உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி ஷெரீப் உஸ்மான் ஹாடி நேற்று முன்​தினம் இரவு உயி​ரிழந்​தார்.

இந்த தகவல் வெளி​யானதை அடுத்​து, கொலை​யாளி​களைக் கைது செய்​யக் கோரி டாக்கா உட்பட பல்​வேறுபகு​தி​களி​லும் ஆயிரக்​கணக்​கான மாணவர்​கள் போராட்​டத்​தில் குதித்​தனர். பல பகு​தி​களில் மாணவர்​கள் வன்​முறை​யில் ஈடு​பட்​டனர். ‘புரோதோம் அலோ’, ‘டெய்லி ஸ்டார்’ ஆகிய நாளிதழ் அலுவலகங்கள் தீவைத்​துக் கொளுத்​தப்​பட்​டன. சட்​டேகி​ராம் பகு​தி​யில் உள்ள இந்​திய துணைத் தூதரக அலு​வல​கம் மற்​றும் இந்​திய துணை தூதரின் வீடு மீது சிலர் கல்​வீசி தாக்​கினர்.

இந்​தி​யா​வுக்கு எதி​ராக​வும், அவாமி லீக் மற்​றும் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக​வும் கோஷம் எழுப்​பினர். பாது​காப்​புப் படை​யினர், கண்​ணீர் புகைக் குண்​டு​களை வீசி, அவர்​களை தடுத்து நிறுத்​தினர். அவாமி லீக் கட்​சிக்கு சொந்​த​மான இடங்​கள் மீதும் மாணவர்​கள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். இந்​துக்​களை குறி​வைத்​தும் தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

SCROLL FOR NEXT