ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நேற்று நிகழ்த்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியாயினர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குனார் மாகாணத்தில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் குறித்து மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் கானி மொசாமென் கூறும்போது, “தலைநகர் அசாதாபாத்தில் உள்ள சந்தை பகுதியில் இருசக்கர வாகனத் தில் வந்த ஒருவர் உடலில் கட்டியி ருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 10 பேர் பலியாயினர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என்றார்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான ஹாஜி கான் தலிபான்களுக்கு எதிராக போராடி வந்துள்ளார். இந்நிலையில் அவரை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் கான் பலியானதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான் தீவிரவாத அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.