உலகளாவிய அளவில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.
சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் சார்பில் உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த மையம் கடந்த 2015-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில், சவுதி அரேபியா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
சவுதி அரேபியா கடந்த ஆண்டில் ரூ.22127 கோடிக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது. இதேபோல இந்தியா ரூ.21546 கோடிக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், இராக், சீனா, வியட்நாம், கிரீஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.