எகிப்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற, முன்னாள் ராணுவ தளபதி அப்தல் ஃபத்தா சிசி (59), அந்நாட்டின் அதிபராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
இஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்ஸி பதவியிலிருந்து விரட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு நடந்த இத்தேர்தலில் 96.6 சதவீத வாக்குகளை பெற்றார் சிசி. அதையடுத்து அவர் புதிய அதிபராக பிரகடனப்படுத்தப்பட்டார்.
உச்ச நீதிமன்ற பொது சபையின் எதிரில் நடந்த பதவியேற்பு விழாவில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. எகிப்தின் 7-வது அதிபர் சிசி. இவரது பதவிக்காலம் 4 ஆண்டுகள்.