உலகப் பெரும் பணக்காரர் ஜெஃப் பெஸோஸ் சொந்த ராக்கெட்டில் தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளார்.
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆரிஜின் ராக்கெட் புறப்பட்டது.
ஜெஃப் பெஸோஸுடன் அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், சிறப்பு கவுரவ விருந்தினராக வேலி ஃபங் என்ற விண்வெளி வீராங்கனை மற்றும் ஆலிவர் டீமன் என்ற பணக்காரர் ஆகியோர் பயணப்படனர். ஆலிவர் இந்தப் பயணத்துக்கான பயணச் சீட்டை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 210 கோடிக்கு ஏலம் எடுத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
வேலி பேங்க், அன்று பெண் என்பதல் நாசாவின் விண்வெளித் திட்டத்தி கீழ் விண்ணுக்குச் செல்ல முடியாமல் தவித்தார். இன்று உலகின் நம்பர் 1 பணக்காரரின் கவுரவ விருந்தினராக விண்ணுக்குச் சென்று இருக்கிறார்.
எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்ஸன் போன்றோரின் விண்வெளிப் பயண நிறுவனங்களுடனான விண்வெளிப் பயண போட்டியின் விளைவு இது.
இந்தப் போட்டியில் சமீபத்தில் ரிச்சர்டு பிரான்ஸன் முந்திக்கொண்டார். அவர் விண்வெளி சென்று திரும்பிய 9வது நாளான இன்று (ஜூலை 20) ஜெஃப் பெஸோஸ் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
சில நிமிடங்களில் விண்வெளியைத் தொட்ட ராக்கெட் பின்னர் மீண்டும் பத்திரமாகத் தரையிறங்கியது. டெக்சாஸ் பாலைவனத்தில் தரையிறங்கியதும் அதிலிருந்து வெளிப்பட்ட ஜெஃப் பெஸோஸ் உள்ளிட்டோர் உற்சாக மிகுதியில் காணப்பட்டனர்.