பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு ரயில் பாதையை அமைக்க சீனா திட்ட மிட்டுள்ளது.
இது தொடர்பாக முதல் கட்ட ஆய்வுப் பணிகளை நடத்த சீன அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் காஷ்கார் நகரிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் துறைமுக நகரான குவாதார் வரை ரயில் பாதையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜின்ஜியாங் மண்டல மேம்பாடு மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் ஜாங் சன்லின் தெரி வித்துள்ளார்.
1,800 கி.மீ. தூர ரயில் பாதை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமா பாத், கராச்சி வழியாக அமைக்கப் படவுள்ளது.ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் சரக்குப் போக்கு வரத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.