அமெரிக்க விமான நிலையத்தில் கனடா வாழ் இந்திய சீக்கியரின் டர்பனை கழற்றி பரிசோதித்த சம்பவம் நடந்துள்ளது.
ஜஸ்மீத் சிங் என்ற நகைச்சுவை நடிகர், இணையதளத்தில் ‘ஜஸ்ரின்’ என்ற பெயரில் பிரபலம். இந்த சம்பவம் தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் என நியூயார்க் டெய்லி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“கூடுதல் சோதனைக்காக பாது காப்பு அதிகாரிகள் என டர்பனை கழற்றச் சொன்னார்கள். இல்லாவிட்டால் எனது விமானத் தைப் பிடிக்க முடியாது எனதெரிவித்தனர். டர்பனைக் கழற்றிய பிறகு அதில் வேறு எதுவும் இல்லை. அந்த சம்பவம் முழுக்க முட்டாள்தனமானது. இறுதியில், டர்பனை மீண்டும் கட்டுவதற்காக கண்ணாடி கேட்டேன். அதற்கு, கழிப்பறைக்குச் சென்று, அங்குள்ள கண்ணாடியைப் பயன்படுத்தும்படி தெரிவித்தனர்” என ட்விட்டர் அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த 9-ம் தேதி, அமெரிக்க சீக்கிய நடிகர் வாரிஸ் அலுவாலி யாவை, டர்பனுடன் விமானத்தில் ஏற அனுமதி மறுத்தனர். இதுதொடர்பாக விமான நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியது நினைவுகூரத்தக்கது.