நாஜிக்களின் ஆட்சிக் காலத்தின் போது யூதர்களிடமிருந்து களவாடப்பட்ட கலைப்படைப்புகளை அவற்றின் சரியான உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்க இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி அரசுகள் முயற் சித்து வருகின்றன.
நாஜிக்களின் காலத்தில் யூதர்களிடமிருந்த ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட கலைப் படைப்புகள் களவாடப்பட்டன. அவற்றில் பல இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்க்க இரு நாட்டு அரசுகளும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மேலும் இரு நாட்டு அருங்காட்சியகங்களிலும் இரு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவாக இணைந்து பணியாற்ற உள்ளனர். இதற்காக இவர்களுக்குப் பயிற்சி களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் மூனிச் நகரத்தில் உள்ள கார்னேலியல் கர்லிட் என்ப வர் தன்னுடைய வீட்டில் இறந்தார். நாஜி கால கலைப்பொருட்கள் வியாபாரியின் மகனான இவர் இறப்பதற்கு முன்பு ஜெர்மன் நாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சுமார் 1,280 கலைப் பொருட்கள் யாருக்கு சொந்தமானவை என்பவை பற்றிய விவரங்களை அளித்திருந்தார்.
அருங்காட்சியகங்களில் உள்ள பொருட்களைத் தவிர்த்து, மேற்கண்ட பொருட்களை உரிய வர்களிடம் சேர்க்கும் பணியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இரண்டு கலைப் படைப்பு பாதுகாவலர்கள் ஜெர்மனி அரசுக் குழுவில் இணைந்திருக்கிறார்கள்.