உலகம்

அச்சுறுத்தும் டெல்டா: 3-வது டோஸை வலியுறுத்தும் ஃபைஸர்

செய்திப்பிரிவு

தற்போது உலகெங்கும் டெல்டா வைரஸ் பரவிவிட்டது. இந்நிலையில், அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டெல்டா, டெல்டா பிளஸ் திரிபுகளை எதிர்கொள்ள மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உலக நாடுகள் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என பைஸர் தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசியாவில் தாய்லாந்து நாட்டில் டெல்டா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளாது. இதனால், அங்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இன்னும் 2 வாரங்களில் ஒலிம்பிக் திறப்புவிழா காணவுள்ளா ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் டெல்டா வைரஸ் அச்சம் காரணம் கட்டுப்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

டோக்கியோ முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸால் உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசித் திட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகம் பரவும்தன்மை கொண்ட இந்த வைரஸை எதிர்கொள்ள ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு உலக நாடுகள் ஊக்குவிக்க வேண்டுமென பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை சோதனை அடிப்படையிலேயே தெரிவிப்பதாகவும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இதற்கான அனுமதி கோரியுள்ளதாகவும். வரும் வாரங்களில் அதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பைஸர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஆன்ட்டிபாடிக்கள் அளவை 5 முதல் 10 மடங்கு அதிகரிப்பதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT