அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் முக்கிய நகரங்களில் தனது சூறாவளி சுற்றுப் பய ணத்தை தொடங்க உள்ளார்.
“ஹார்டு சாய்சஸ்” என்ற பெயரில் ஹிலாரி எழுதியுள்ள புத்தகம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தகத்தை விளம்பரப்படுத் துவதற்காக நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் புறநகர் என பல்வேறு நகரங்களுக்கு ஹிலாரி சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
2016-ல் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடக் கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக புத்தக விளம்பரத்தோடு தேர்தல் பிரச் சாரத்தையும் அவர் மறைமுகமாக மேற்கொள்வார் என்று தெரிகிறது.
அதிபர் ஒபாமா ஆட்சியில் 4 ஆண்டுகள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது எடுத்த முடிவுகள், முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஹிலாரி புத்தகத்தை எழுதியுள்ளார். இப் புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருப் பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.