உலகம்

தென் ஆப்பிரிக்காவில் கரோனா தீவிரம்: நிரம்பும் மருத்துவமனைகள்

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவில் கரோனா மூன்றாவது அலை காரணமாக தினசரி எண்ணிக்கை 24,000-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தென் ஆப்பிரிக்காவில் கரோனா அலை தீவிரத்தை அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோகன்ஸ்பெர்க் போன்ற முக்கிய நகரங்களில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக தென் ஆப்பிரிக்க மருத்துவ கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,000 பேர் வரை பலியாகி உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 3.3% பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோப்பியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 39.38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT