பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் சந்தித்துக் கொண்டதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக பான் கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறும்போது, “மோடி-நவாஸ் சந்திப்பை நாங்கள் நிச்சய மாக வரவேற்கிறோம்” என்றார்.
பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில், மோடியும் நவாஸும் சிநேகத்துடன் கரம் குலுக்கினர். பின்னர் சிறிது நேரம் சோபாவில் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
பருவநிலை மாற்ற மாநாடுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பான் கி-மூன், இந்தியா பாகிஸ்தான் இடையே உறவு மேம் பட்டு வருவது, தீவிரவாத அச்சுறுத் தல் உள்ள இரு நாடுகளிலும் உகந்த சூழலை ஏற்படுத்தும் என தெரிவித்திருந்தார்.