உலகம்

பாலிவுட் படங்களை பிரதி எடுக்காதீர்கள் இம்ரான் கான்

செய்திப்பிரிவு

பாலிவுட் படங்களை பிரதி எடுப்பதை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தான் இயக்குநர்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் இம்ரான் கான் பேசும்போது, “ தவறு முதலில் பாலிவுட் படங்களை பிரதி எடுப்பத்திலிருந்து ஆரம்பிக்கிறது. நமது நாட்டின் கலாச்சாரத்தை எடுக்காமல் மற்றொரு நாட்டின் கலாச்சாரத்தை திரைப்படமாக எடுக்கிறோம். பாலிவுட் படங்களை பிரதி எடுப்பதை நிறுத்துஙகள்.

இன்றைய இளம் இயக்குனர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் என்றால்... இது உலக அனுபவம். அசல் மட்டும் விற்கபடும், நகல் விற்கப்படாது. நமது மண்ணின் கதைகளை கொண்டு வாருங்கள், தோல்வியை கண்டு பயம் கொள்ளாதீர்கள்.பயம் கொள்பவர்கள் வெற்றி பெற முட்டியாது” என்றார்.

அண்மையில் சர்வதேச கவனம்பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இம்ரான் கான்

“பெண்கள் சிறிய ஆடைகளை அணிந்துகொண்டிருந்தால் அது நிச்சயம் ஆண்களைத் தவறு செய்யத் தூண்டும். ரோபாட்களாக இருந்தால் மட்டுமே ஆண்களால் அப்படித் தூண்டப்படாமல் இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.
“உண்மையிலேயே பெண்களின் ஆடைதான் பாலியல் குற்றங்களைத் தூண்டுகிறதா?” என்று பேட்டி எடுத்தவர் மீண்டும் கேட்டதற்கு “நீங்கள் எந்தச் சமூகத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது” என்று பதிலளித்துள்ளார் இம்ரான் கான்.

இம்ரான் கானின் இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT