இரு இந்திய இளைஞர்களுக்கு, இங்கிலாந்து ராணியின் இளம் தலைவர்கள் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களில் அடுத்தவர் களின் வாழ்வில் மாற்றத்தை ஏற் படுத்தும் 60 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இங்கிலாந்து ராணி எலிஸபெத் வைரவிழா அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்படுகிறது.
2016-ம் ஆண்டுக்கான இளம் தலைவர்கள் விருதுப்பட்டியலில் இந்தியாவின் கார்த்திக் சானே (21), நேஹா ஸ்வெய்ன் (28) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பக்கிங்ஹாம் மாளிகையில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும்.
உலகம் முழுவதும் அனை வருக்கும் கல்வி என்ற முயற்சிக் காக கார்த்திக் இவ்விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். கார்த்திக் பிறவியிலேயே பார்வையை இழந்தவர். பார்வையிழந்த மாணவர்கள் 10-ம் வகுப்புக்குப் பிறகு அறிவியல் பாடத்தைப் படிக்க முடியாததை உணர்ந்த இவர், அவர்களுக்கு உதவும் வகை யில் ஸ்டெம்ஏக்சஸ் (STEMAccess) என்ற திட்டத்தைக் கண்டறிந்தார். இது பார்வையற்றவர்கள் அறி வியலைக் கற்க உதவுகிறது.
கலந்தாய்வுகள் மூலம் தலைமைப் பண்பை வளர்த் தெடுக்கும் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனராக நேஹா உள்ளார். இந்தியாவிலுள்ள பள்ளி களில் கட்டணமில்லா பணி மனையை நடத்தி, தலைமைப் பண்பு வளர்த்தெடுக்க இந்த தொண்டு நிறுவனம் உதவுகிறது.
53 காமன்வெல்த் நாடுகள் மீதான எலிஸபெத் ராணியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகை யில் ‘ராணியின் இளம் தலைவர் விருது’ கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.