பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அடுத்ததாக பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த நவம்பர் 13-ம் தேதி இரவு பாரீஸின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். 130 பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறி உயிரிழந்தனர். சலா அப்தேசலாம் என்ற தீவிரவாதி மட்டும் சில நாட்களுக்கு பிறகு பிடிபட்டார்.
அவரிடம் பிரான்ஸ் பாதுகாப் புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன
ஐ.எஸ். அமைப்பில் இணைந் துள்ள பிரிட்டிஷ் இளைஞர்களை மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பி மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஐ.எஸ். அமைப்பு சதித் திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி தலைநகர் லண்டன் அல்லது பிரிட்டனின் மிகப்பெரிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரான்ஸ் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே பிரிட்டன் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் அனைத்தி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அகதிகளோடு ஐரோப்பாவுக்குள் ஊடுருவுவதால் அகதிகள் விவ காரத்தில் கடுமையான நட வடிக்கைகள் கடைப்பிடிக்கப்படு கின்றன.