2015ல் அமெரிக்க போலீஸ் நடத்திய பல்வேறு தாக்குதலில் பொதுமக்களில் 965 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கையில் ஆயுதம் இல்லாத கருப்பினத்தவர்களே அதிகம் என ஓர் ஆய்வு கூறிகிறது.
அமெரிக்காவில் இனவெறுப்பு ரீதியான உள்நாட்டு வன்முறைகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்த நிலையில் உள்ளது. துப்பாக்கி கலாசார வன்முறை நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்த ஓர் ஆய்வை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
இந்த வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்க போலீஸார் தடுப்பு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகின்றனர். அத்தகைய நடவடிக்கைகளில் துப்பாக்கியுடன் காணப்பட்ட 564 பேரும் கத்தி போன்ற குறைந்த அளவு ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருந்த 281 பேரையும் ஆயுதங்கள் ஏதும் இல்லாத 90 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் ஆய்வில் தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாது, போலீஸாரால் கொல்லப்பட்ட 5ல் ஒரு அமெரிக்க கருப்பினத்தவர் அல்லது லத்தின் அமெரிக்கர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் அனைத்திலும் போலீஸாருக்கு குறைந்த அளவிலான நடவடிக்கையே போதுமானது என்று அரசு அறிவிறுத்தியுள்ளது.