உலகம்

கனடாவில் உயர் நீதிமன்ற நீதிபதியானார் தமிழ் பெண்

செய்திப்பிரிவு

கனடா உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள் ளார்.

காரைக்குடி முன்னாள் சேர்மன் அருணாச்சலம் செட்டியார், சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம். இவரது மனைவி வள்ளியம்மை. இத்தம்பதியர் கனடாவின் வான்கூவர் நகரில் வசிக்கின்றனர்.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத் தில் 1992-ல் சட்டக் கல்வியை வள்ளி யம்மை முடித்தார். 1995-ம் ஆண்டு முதல் அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

குடும்ப வழக்குகள், நிறுவனம் சார்ந்த வழக்குகள், வணிகம், வரி சம்பந்தப்பட்ட வழக்குகள், நிர்வாகம், பொது வழக்குகள் என சுமார் 20 ஆண்டுகள் பல்வேறு வழக்குகளில் திறமையாக வாதாடி யுள்ளார். மிக குறுகிய காலத்தி லேயே கனடா நீதித்துறையில் முக்கிய பிரபலமாக உருவெடுத் தார்.

தேசிய கனடியன் பார் அசோசி யேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்பு களையும் வகித்துள்ளார். அவரது பணிகளைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய- கனடா வர்த்தக அமைப்பின் தலைவராகவும் தேசிய அமைப்பின் இயக்கு நராகவும் பணியாற்றியுள்ளார். இதன்மூலம் கனடா, இந்தியா இடையே வர்த்தக உறவை மேம்படச் செய்துள்ளார்.

தற்போது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா உயர் நீதிமன்ற நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

கனடா உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழ்ப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த நாட்டில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் வள்ளியம்மை பெருமை சேர்த்துள்ளார்.

SCROLL FOR NEXT