பிரான்ஸ் அதிபர் மக்ரோனை கன்னத்தில் அறைந்த நபருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் மக்ரோன், த்ரோம் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றைப் பார்வையிடச் சென்றிருந்தார். பள்ளியைப் பார்வையிட்டுத் திரும்பியபோது அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி மக்ரோன் கை குலுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர், மக்ரோனின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மக்ரோனின் பாதுகாவலர்கள் அவரை மீட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்
பிரான்ஸில் கரோனா பாதிப்பு குறைந்து தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. பல்வேறு தளர்வுகளையும் அதிபர் மக்ரோன் அறிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பிரான்ஸ் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் மக்ரோன். இந்த நிலையில் மக்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் டேமியன் தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்பதற்கு மக்ரோனை அறைந்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் மக்ரோனை அறைந்த டேமியனுக்கு 18 மாதம் சிறைத் தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் அவர் அறைந்ததை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து 14 மாதங்கள் சிறைத் தண்டனை கழிக்கப்பட்டு அவருக்கு 4 மாதம் சிறைத் தண்டனை பெற உத்தரவிடப்பட்டது.