ஈரானில் கரோனா பாதிப்பு 30 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதார அமைப்பு தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 12,398 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 81,672 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் கரோனா நான்காம் அலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஈரானும் ஒன்று. ஈரானில் 3% பேருக்கு மட்டுமே இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், கோவிஷீல்ட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
கரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தும் பணியையும் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 37 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.