உலகம்

டமாஸ்கஸில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: சிரியா தகவல்

செய்திப்பிரிவு

டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சிரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிரிய ராணுவம் தரப்பில், “சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிரிய ராணுவ வீரர்களில் 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும், சிரிய ராணுவ நிலைகள் மீதும் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பும் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்தும் உள்நாட்டுப் போருக்கு ஈரான் முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் ஈரான் தனது நாட்டு ராணுவ வீரர்களை சிரிய பாதுகாப்புப் படைக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பி வைத்துள்ளது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இந்த நிலையில் சிரியாவில் ராணுவ வீரர்களை மையமாகக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT