தமிழக மீனவர்கள் 29 பேரை விடுவிக்க இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இலங்கையின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுவித்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரனாயகே கூறுகையில், "இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசுக்கு நல்லென்னத்தை வெளிப்படுத்தும் வகையில் மீனவர்கள் விடுதலை செய்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.
முன்னதாக கடந்த 26-ம் தேதி மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வரும் முன்னர் இலங்கைச் சிறைகளில் இருந்த மீனவர்களை விடுவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.