உலகம்

கரோனா ஊரடங்கு எதிரொலி- பிரிட்டனில் 70% ஷாப்பிங் மால்கள் மூடப்படும் அபாயம்

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காரணமாக பிரிட்டனில் 70 சதவீத ஷாப்பிங் மால்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. சில மால்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதால் ஷாப்பிங் மால்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஷாப்பிங் மால்களில் உள்ள அத்தியாவசியமற்ற கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பிரிட்டனில் சுமார் 700 ஷாப்பிங்மால்கள் உள்ளன. இவற்றில் 10%முற்றிலுமாக மூடப்படும் சூழலில்உள்ளன.சில மால்கள் பகுதியள வில் குடியிருப்புகளாகவும், அலுவலகங்களாகவும் மாற்றப்பட் டுள்ளன.

30 மால்களில் தற்போது பாதியளவு காலியாக உள்ளன. 5 மால்களில் 80 சதவீத கடைகள் காலியாகிவிட்டன. 34 ஷாப்பிங் மால்களில் 40 முதல் 50 சதவீதம் வரையிலான கடைகள்தான் செயல்படுகின்றன.

நாட்டிங்ஹாம், கேஸில்கேட், ஸ்டாக்டன், ஷ்ரூஸ்பரியில் உள்ளரிவர்சைடு சென்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இத்துடன் ஹை வைஹோம்ப், மெய்டன் ஹெட் பகுதியில் உள்ளநிகோல்சன் பகுதிகளில் விரிவாக்கநடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன.

தெற்கு லண்டனில் உள்ள கேஸில் ஷாப்பிங் சென்டர் இடிக்கப்படுகிறது. கரோனா தொற்று மக்களை நேரடியாக கடைகளுக்குச் சென்று பொருள் வாங்குவதைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளிவிட்ட தாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT