ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஞாயிறு நிலவரப்படி, ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 43, 23, 795 பேருக்கு கரோனா தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,30,286 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 1.66% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.