உலகம்

சர்வதேச சட்டத்தை மீறியதாக புகார்: இலங்கை போலீஸாருக்கு கண்டனம்

பிடிஐ

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியதாகக் கூறி இலங்கை போலீஸாருக்கு அந்நாட்டு மனித உரிமை ஆணையம் (எச்ஆர்சி எஸ்எல்) கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தடியடியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 29-ம் தேதி கணக்கியல் (அக்கவுன்ட்டன்சி) பட்டயம் பயிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்கு வதற்காக போலீஸார் தடியடி நடத் தியதுடன், அவர்கள் தப்பியோட முயன்றபோதும் கூர்மையான பொருட்களால் தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த 9 மாண வர்கள் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். 39 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி 32 பக்க அறிக்கையை தயாரித்துள்ளது.

அதில், “நாட்டின் அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமையை மீறி மாணவர்கள் மீது போலீஸார் கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் மீறும் செயல் ஆகும். போலீஸாரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தடிய டியால் பாதிக்கப்பட்ட 9 மாணவர் களுக்கும் இலங்கை போலீஸார் ரூ.1.45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை போலீஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தி ருப்பது இதுவே முதல்முறை.

SCROLL FOR NEXT