உலகம்

ஆட்சிக் காலத்தில் தவறிழைத்தேன்: ராஜபக்ச ஒப்புதல்

செய்திப்பிரிவு

அதிபராக பதவி வகித்த காலத்தில் சில விஷயங்களில் தவறிழைத்தது உண்மைதான் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அவர் பேசியதாவது:

புலம்பெயர்ந்த தமிழர்கள் கேட்பதை எல்லாம் கொடுப்பது நல்லிணக்கம் இல்லை. அதேபோல தமிழ் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டுகிறேன்.

மூத்த ராணுவ தளபதிகள் ஓய்வில் செல்ல நிர்ப்பந்திக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சரியான நட வடிக்கை அல்ல. எனது ஆட்சிக் காலத்தின்போது சில விஷயங் களில் நான் தவறிழைத்தது உண்மைதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT