உலகம்

தன்பாலின உறவாளர் ரத்த தானம் வழங்க அமெரிக்கா அனுமதி

செய்திப்பிரிவு

தன்பாலின உறவாளர்கள் ரத்த தானம் வழங்க 30 ஆண்டுகள் அமலில் இருந்த தடையை அமெரிக்க அரசு நீக்கியுள்ளது.

அமெரிக்காவில் எய்ட்ஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 1980-களில் தன்பாலின உறவாளர்கள் ரத்த தானம் வழங்க தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடை நீக்கப் பட்டுள்ளது. எனினும் தன்பாலின உறவாளர்கள் கடைசியாக பாலியல் உறவு வைத்திருந்த தேதியை கணக்கிட்டு ஓராண்டுக் குப் பிறகே அவர்கள் ரத்த தானம் வழங்கலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பாலியல் தொழி லாளிகளிடம் செல்லும் ஆண்கள் மற்றும் குறிப்பிட்ட வகை மருந்து களை உட்கொள்வோர் ஆகியோ ரும் ஓராண்டு காலத்துக்குப் பிறகே ரத்த தானம் வழங்க முடியும் என்று அமெரிக்க சுகா தாரத் துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் முடிவு குறித்து தன்பாலின உறவா ளர்கள் கடும் அதிருப்தி தெரிவித் துள்ளனர். ரத்த தான தடை முழு மையாக நீக்கப்படவில்லை, பாதி யளவுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள் ளது, இது அநீதி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT