எகிப்தில் இஸ்லாமிய அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது பட்டி மற்றும் 180-க்கும் மேற்பட் டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீதிமன்றம் சனிக் கிழமை உறுதி செய்தது.
அதிகப்படியான நபர்களுக்கு ஒரே நேரத்தில் மரண தண்ட னையை உறுதி செய்ய வகை செய்யும் இந்தத் தீர்ப்பு, தெற்கு மின்யா குற்றவியல் நீதிமன் றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தலைமை வகித்த நீதிபதி சையது யூசுப்தான் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப் பின் தலைவர் முகமது பட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள 2-வது மரண தண்டணையாகும்.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்டவர்களை நீதி மன்றம் விடுவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பைக் கேட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கதறி அழுததுடன் ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதேநேரம் விடுதலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
கடந்த ஆண்டு முன்னாள் அதிபர் முகமது மோர்ஸியை ராணுவம் பதவி நீக்கம் செய்ததை யடுத்து நாடு முழுவதும் போராட் டம் வெடித்தது. இதில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2013, ஆகஸ்ட் 14-ம் தேதி மின்யா நகருக்கு அருகே உள்ள எல்-அட்வா பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது தாக்கு தல் நடத்தியதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 2 பேர் கொல் லப்பட்டனர். இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மற்றும் அதன் தொண்டர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
குற்றம்சாட்டப்பட்ட 683 பேருக்கு மரண தண்டனை விதிக் கலாம் என இந்த வழக்கு விசாரணைக்கு தலைமை வகித்த யூசுப் பரிந்துரை செய்தார். இது நாட்டின் முக்கிய ஆன்மிக தலைவர் முப்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தனது கருத்தை கூறியிருந்தார். இதன் அடிப்படையில், 183 பேருக்கு மட்டும் மரண தண் டனையை உறுதி செய்து, 400 பேரை விடுவித்து நீதிபதி யூசுப் உத்தரவிட்டுள்ளார்.