உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கா தன் ராணுவத்தை குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான், ஐஎஸ், அல்-காய்தா ஆகிய தீவிரவாத அமைப் புகளை ஒழித்துக் கட்டுவதற்காக ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, துருக்கி, சோமாலியா, ஏமன், லிபியா, நைஜர், கேம்ரூன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, எகிப்து, ஜோர் டான், கொஸோவோ ஆகிய நாடு களில் நவீன ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா தாக்கல் செய்த அறிக் கையில் இந்த தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர் ஒபாமா கூறும்போது, ‘‘அல்-காய்தா தீவிர வாத தலைவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஆப்கானிஸ் தான் ராணுவத்துக்கு தேவை யான உதவிகளை வழங்கு வதுடன், அங்கிருந்து அமெரிக் காவை தீவிரவாதிகள் தாக்கு வதை தடுப்பதற்கான நடவடிக் கைகளிலும் ஈடுபடுவர். இதே போல் இராக்கில் 3,550 வீரர்களும், சிரியாவில் 50 வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவித்தார்.
துருக்கி, சோமாலியா, ஜோர்டான், கொஸோவோ ஆகிய நாடுகளிலும் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக அந்நாட்டு ராணுவத்துடன், அமெரிக்க வீரர்கள் இணைந்து செயல்படுவர் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.