உலகம்

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்

பிடிஐ

இந்தியா, பாகிஸ்தான் இடையி லான பதற்றத்தைத் தணிப்பதற்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கவெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

இந்தியா, பாகிஸ்தான் நாடு களின் தேசிய பாதுகாப்பு ஆலோச கர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சந்தித்துப் பேசியது வரவேற்கத்தக்கது. இவ்விரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்கவும், அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவும், நெருங்கிய உறவு ஏற்படவும் எடுக்கப்படும் அனைத்து சாதகமான நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவு அளிப்போம்.

இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமல்லாது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டுமானால், இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டியது அவசியம்.

பாகிஸ்தான் சார்பில் இஸ்லாமா பாத்தில் ‘ஹார்ட் ஆப் ஆசியா உச்சி மாநாடு’ நடைபெறுவது வரவேற்கத்தக்கது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் இதர உயர் அதிகாரிகள் கலந்து கொள்வது பாராட்டுக்குரியது.

ஆப்கானிஸ்தானில் அமைதி யான சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஓல்சன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT