இலங்கையில் புலம் பெயர்ந்த தமிழர்களை இன்னும் 6 மாதங் களில் மீள்குடியேற்றம் செய்யும் வகையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விழாவில் சிறிசேனா பேசியதாவது:
இலங்கையில் புலம் பெயர்ந்த தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய் யும் வகையில் விரைவில் எனது தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைப்பேன். இதற்காக ராணுவம், காவல்துறை, மாகாண அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து செயல்திட்டம் உருவாக்கப்படும்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று பார்த்தேன். அவர்கள் எவ்வளவு பரிதாபகரமான நிலையில் வசிக்கிறார்கள் என்பதை கண்டு வருத்தம் அடைந்தேன்.
வடஇலங்கையில் கடும் பாதுகாப்பு விதிமுறைகளை தளர்த் தியதன் மூலம் தேசப் பாதுகாப்புடன் சமரசம் செய்துகொண்டுள்ளதாக என்னையும் பிரதமர் ரணிலையும் குற்றம் சாட்டுகின்றனர். தலைநகர் கொழும்புவில் இருந்துகொண்டு தேசப் பாதுகாப்பு குறித்து பேசும் இவர்கள், இங்குள்ள மக்களின் நிலையை நேரில்வந்து ஆய்வு செய்ய வேண்டும்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் ஏதுமில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த இந்த மக்கள் வசிக்கும் நிலையில்தான் தேசப்பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமை யிலான முந்தைய அரசு உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதி ஏற்படுத்தினாலும் உண்மையான நல்லிணக்கம் இன்னும் ஏற்படவில்லை. போரில் வெற்றி பெற்றோம். அமைதி திரும்பி யுள்ளது. ஆனால் போருக்கான அடிப்படைக் காரணங்கள் அப்படி யேதான் உள்ளது.
தேசப் பாதுகாப்பு கேள்விக்குறி யாக உள்ளதாக பிரச்சினை எழுப்பி ராஜபக்ச ஆதரவாளர்கள் அரசை கவிழ்க்க முயற்சி செய்கின்றனர்.
இவ்வாறு அதிபர் சிறிசேனா பேசினார்.
கடந்த 30 ஆண்டுகளாக ராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் நிலங்களை சிறிசேனா அரசு விடுவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக பதவி வகித்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு, சிவலியன் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலி களுக்கு எதிரான இறுதிப் போரில் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் இறந்ததாக ஐ.நா. குழு ஒன்று தெரிவிக்கிறது.
2014, ஜூன் மாத நிலவரப்படி ஐ.நா. மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1,23,028 இலங்கை வம்வாவளி யினர் அகதிகளாக உள்ளனர். மேலும் 16,190 பேர் அடைக்கலம் தேடுவோராக உள்ளனர். 30,847 பேர் உள்நாட்டில் புலம் பெயர்ந்த வர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் பாதுகாக்கப்பட்டு அல்லது உதவி அளிக்கப்பட்டு வருகின்றனர்” என்று கூறப்பட் டுள்ளது.