படம் உதவி: ourworldindata.org 
உலகம்

கரோனா தடுப்பூசி: அதிகம் செலுத்தப்பட்ட முதல் 15 நாடுகளின் விவரம்

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனா வைரஸ், இரண்டாம், மூன்றாம் அலைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் இரண்டாவது அலையை எதிர்கொண்டிருக்கும் இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்து வருகிறது.

கரோனா தடுப்பூசிகளால் கரோனா தொற்று விகிதம் பல நாடுகளில் குறைந்துள்ளது. இதற்கு இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன் ஆகிய நாடுகளை உதாரணமாகக் கூறலாம்.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்திய முதல் 15 நாடுகளின் விவரத்தை 'our world in data' என்ற இணையதளப் பக்கம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

இஸ்ரேல்: 63%

பிரிட்டன்: 52%

ஐக்கிய அரபு அமீரகம்: 51%

மங்கோலியா: 49%

பஹ்ரைன்: 47%

அமெரிக்கா: 45%

சிலி: 45%

ஹங்கேரி: 45%

கனடா: 39%

கத்தார்: 39%

உருகுவே: 35%

பின்லாந்து: 35%

ஜெர்மனி: 32%

செர்பியா 32%

இஸ்டோனியா: 27.9%

இந்தியாவில் இதுவரை 9% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை 8.3% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.

இந்தியா, தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்காவும் சமீபத்தில் கரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT