சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அத்துமீறி செயல்படுவதாக சீனா குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீன கடல் பகுதியில் நாங்கள் செயற்கையாக உருவாக்கி உள்ள தீவுகளின் வான் பகுதியில், அமெரிக்காவின் பி-52 போர் விமானம் சமீபத்தில் அத்துமீறி பறந்துள்ளது.
இந்தப் பகுதியில் அமெரிக்க ராணுவம் வேண்டுமென்றே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ ரீதியிலான உறவை பாதிக்கும் இத்தகைய செயலை உடனடியாக தடுத்து நிறுத்த அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் நாட்டின் இறையான்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், தென் சீன கடல் பகுதியில் சீனாவால் செயற்கையாக உருவாக்கப் பட்டுள்ள 7 தீவுகளுக்கு அந்த நாடு பாரம்பரிய உரிமை கொண்டாட முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.