படம்: ட்விட்டர் உதவி 
உலகம்

ஆப்கனில் பள்ளி மாணவிகளைக் குறிவைத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் தரப்பில், “காபூலில் உள்ள சயித் அல் ஷுஹாடா பள்ளிக்கு முன் பகுதியில் சனிக்கிழமை மாலை காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவிகள். இந்தச் சம்பவத்தில் 105 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தலிபான்கள் தாங்கள் செய்யவில்லை என்று மறுத்துவிட்டனர்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கனில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதலையும் ஐஏஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தாக்குதலில் 40% மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் குழந்தைகள் மட்டும் 1,600 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தான் பல வருடங்களாகக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நாடாக இருந்ததில்லை என்று ஐ.நா. சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை விட்டிருந்தது.

SCROLL FOR NEXT