நைஜீரிய எரிவாயு ஆலையில் டேங்கர் லாரியில் வைக்கப்பட்டிருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.
நைஜீரியாவில் நெவி என்ற இடத்தில் எரிவாயு தொழிற்சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் இருந்த சமையல் காஸ் சிலிண்டரில் திடீர் கசிவு ஏற்பட்டு பயங்கர விபத்து ஏற்பட்டது.
விபத்தால் அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகள் அனைத்தும் தீயில் நாசமாகின. தொழிற்சாலையும் தீயில் கருகியது. வீட்டு தேவைக்காக சிலிண்டர்களை பெற வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் இந்த விபத்தில் பலியாகினர். பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.
காயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைப்பதில் தாமதமானதால் உயிரிழப்பு குறித்த அச்சம் நிலவுகிறது.